Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

TV9 Tamil 21 hrs ago
சென்னை, ஜூன்ன்23 : ஈரான் போரால் (Iran War) தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
ஜுன் மாதம் முதலே கடும் சரிவை சந்திக்க தொடங்கிய தங்கம்,  இன்று (ஜூன் 23, 2026) மீண்டு சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் மாதம் முதலே கடும் சரிவை சந்தித்து வரும் தங்கம்

ஈரான் போரால் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் 2026, ஜூன் மாதம் முதல் தொடர் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே சரிவை சந்தித்து வரும் தங்கம், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!

இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் தங்கம் 6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil