Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இணையத்தில் வைரலாகும் சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து சக்கரை பெண்ணே பாடல்!

இணையத்தில் வைரலாகும் சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து சக்கரை பெண்ணே பாடல்!

TV9 Tamil 1 day ago
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh). வாரிசு நடிகையான இவர் சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து நாயகியாக நடிக்கத் தொடங்கிய இவர் மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தார். பிறகு தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகன்களுக்கு ஜோடியாக மட்டும் இல்லாமல் அவ்வபோது படங்களில் கதையின் நாயகியாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக வெளியானது டோரதி. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் குறைவான நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் சத்யவான் சாவித்திரி.

இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் சக்கரை பெண்ணே பாடல்:

இந்த சத்யவான் சாவித்திரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மிஸ்கின் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் எழுதி இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளான சக்கரை பெண்ணே என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ... இணையத்தில் வெளியானது டேர்டெவில் படத்தின் பூஜை போட்டோஸ்

சத்யவான் சாவித்ரி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil