தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டும் மே மாதம் படம் திரையரங்கில் வெளியானது.
இணையத்தில் வைரலாகும் சூர்யா - நஸ்ரியாவின் கியூட் வீடியோ:
இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் மனைவி ஷிஃபினா பாபின் பாக்கர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைப்பெற்றது. இந்த பட விழாவில் நடிகர்கள் சூர்யா - நஸ்ரியா உட்பட சூர்யா 47 படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் சூர்யா - நஸ்ரியாவின் கியூட் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. ... ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் - விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

