சென்னை, பிப்ரவரி 19 : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்யுப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் வருகிற 21, 2026 அன்று சனிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, பிப்ரவரி 19, 2026 அன்று வானம் மேகத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் ஏற்படும். மேலும் அதிக பட் வெப்பநலை 31 முதல் 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும் காணப்படும்.மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகள் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்ட வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
