Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2026: 5வது பைனலில் களம்.. இதுவரையிலான கோலியின் சாதனை என்ன?

IPL 2026: 5வது பைனலில் களம்.. இதுவரையிலான கோலியின் சாதனை என்ன?

TV9 Tamil 3 weeks ago
டப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) தங்களது நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் தருவாயில் உள்ளது.
ரஜத் பதிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் 2026 சீசனில்(IPL 2026) இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை அதாவது 2026 மே 31ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், தனது 5வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி மீது அனைவரின் பார்வையும் இருக்கும். ஐபிஎல் 2026 பைனல் எப்போது..? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ! விராட் கோலி 2008-ல் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் கடந்த 2025ம் ஆண்டுதான் தனது முதல் பட்டத்தை வென்றார். இதுமட்டுமின்றி, ஐபிஎல்-லில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். எனவே, இறுதிப் போட்டியிலும் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இறுதிப் போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

விராட் கோலியின் இறுதிப்போட்டி சாதனை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 4 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், கோலி தனது ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார். இந்த 4 ஐபிஎல் இறுதிப் போட்டிகளையும் சேர்த்தே விராட் கோலி மொத்தமாகவே 140 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவற்றில் ஒன்றில் மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். கோலி தனது முதல் ஐபிஎல் இறுதிப் போட்டியை 2009-ல் அனில் கும்ப்ளேவின் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிராக விளையாடினார். அதில், கோலி 8 பந்துகளில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2011-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடியது, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்ட விராட் கோலி 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். கடந்த 2016ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 3வது இறுதிப் போட்டியில் விளையாடியது. அப்போது, ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி இருந்தார். அந்த சீசனில் விராட் கோலி 4 சதங்களை அடித்து,சிறந்த ஃபார்மில் இருந்தார். இதனை தொடர்ந்து, நடந்த இறுதிப் போட்டியிலும் கோலி மற்றுமொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கோலி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஆனால், அவரால் தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடந்த 2025ம் ஆண்டு இறுதிப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2026 சீசனில் சொதப்பல்.. அடுத்த சீசனில் இந்த 4 அணிகளின் கேப்டன்கள் வெளியேற்றமா?

சிறப்பான பார்மில் விராட் கோலி:

நடப்பி ஐபிஎல் 2026 சீசனில் கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 164.38 ஸ்டிரைக் ரேட் மற்றும் 50 சராசரியுடன் 600 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்த சீசனில் கோலி 4 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தைக் கருத்தில் கொண்டு, இறுதிப் போட்டியில் கோலி ஒரு சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தி, தனது அணியை வெற்றிக்கும் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil