தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் கவின். இவர் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்னதாக சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.
இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின்:
அதன்படி நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு குழந்தை பிறந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு காதலி மோனிகாவை கரம் பிடித்த நடிகர் கவின் தற்போது தந்தையாகி உள்ளார். தந்தை ஆனது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றாலும் அவர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானது இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகும். மேலும் அதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்து உள்ளதாக நடிகர் கவின் அவரது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நல்ல விசயத்தை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் நடிகர் கவினுக்கு தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். ... ப்ரீ புரடெக்ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

