தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இளையராஜா. இவரது இசையில் தொடர்ந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இளையராஜாவிற்கு பொழியும் பிறந்தநாள் வாழ்த்து மழை:
இளையராஜாவின் உண்மையான பிறந்த தேதி என்பது ஜூன் மாதம் 3 தான். அன்றைய நாள் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளும் கூட. அன்று கலைஞரை மட்டுமே மக்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக தனது பிறந்த நாளை முந்தைய நாளான 2-ம் தேதி கொண்டாட இளையராஜா முடிவு செய்ததாக வட்டாரங்களில் பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 02-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இளையராஜா தனது 83-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்கு நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் பலர் நேரில் வந்து இளையராஜாவிற்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலர் நேரில் வந்தும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது… வெளியானது மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட அப்டேட்இசைஞானி இளையராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

