Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது. வெளியானது மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட அப்டேட்

அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது. வெளியானது மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட அப்டேட்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு இயக்குநராக பணியாற்றி வருகிறார் மாரி செல்வராஜ். அதன்படி தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
அவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே சாதியால் ஏற்படும் ஏற்றத்தழ்வுகளை வெளிப்படையாக பேசி பலரின் நெஞ்சங்களை உழுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு மாரி செல்வராஜிற்கு என்று தமிழ் சினிமாவில் மக்கள் ஒரு அந்தஸ்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயகுநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பைசன் காளமாடன். நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெளியானது மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட அப்டேட்:

முன்னதாக நடிகர் தனுஷின் படத்தை தான் இயக்குநர் மாரி செல்வராஜ் 6-வது படமாக இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து வேற வேற தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷின் படத்தை தற்போது இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மாரி செல்வராஜின் 6-வது படத்திற்கு மஞ்சணத்தி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதாக அறிவுப்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. ... RJ Balaji: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை - பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil