தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலஜி. இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இயக்குநராக இருப்பவருக்கு துரந்தர் ஒரு பாடமாக இருக்கும்:
கருப்பு படத்திற்காக வேலை செய்துகொண்டிருந்தபோது நாங்கள் பல படங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து சிறுசிறு யோசனைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை என் படத்திற்கு உத்வேகமாகப் பயன்படுத்தினேன். சமீபத்தில் நான் துரந்தர் படத்தைப் பார்த்தேன், மற்ற பார்வையாளர்களைப் போலவே அதையும் ரசித்தேன். அது தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தது. ஒரு திரைப்பட இயக்குனருக்கு, அந்தப் படம் ஒரு பாடம். இங்கே இரண்டு பாகங்களுக்கான பட்ஜெட் ஒரு கதாநாயகனின் சம்பளத்திற்குச் சமம். சில கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள நான் அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். அது ஆடம்பரமாக எடுக்கப்பட்ட படமும் அல்ல. தேவைப்பட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். பல காட்சிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்ததற்காக ரன்வீர்சிங்கிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். Also read... கூலி படத்தின் மீதான விமர்சனம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பா.லாஜி பேச்சு:

