தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் தளபதி விஜய் தமிழ் நாட்டில் அரசியல் கட்சியை ஆரம்பித்து இந்த 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜன நாயகன் பட கசிவு வேதனையுடன் பேசிய நடிகை மமிதா பைஜூ:
மமிதா பைஜூ சமீபத்தில் பேட்டியில் கூறியதாவது, இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. எத்தனையோ பேரின் கனவுகளும், கடின உழைப்பும் இதில் அடங்கியுள்ளன; அவை வீணாகிவிடக் கூடாது. ஆரம்பத்தில், என்னால் இதை நம்பவே முடியவில்லை. சமூக ஊடகங்களில் வரும் அனைத்தும் உண்மையாக இருக்காது அல்லவா? அதனால், அடடா... அப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது, என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எதார்த்தம் உறைத்தபோது அது உண்மையில் கசிந்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது... என் சகோதரர்தான் முதன்முதலில் எனக்கு அந்தத் தகவலைத் தெரிவித்தார். அப்போது நான், ஏன் இப்படி...? என்றுதான் கேட்டேன். மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார். ... கருப்பு படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கிய படக்குழு - வைரலாகும் போட்டோஸ்இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜூவின் பேச்சு:

