Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் அனைவரும் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்தார். அவர் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக உருவான படம் இந்த ஜன நாயகன். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் படங்களை தயாரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், ரேவதி மற்றும் நாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்:

தணிக்கை மற்றும் பிற செயல்முறைகள் திட்டமிட்டபடி நடந்தால், 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 17-ஆம் தேதி 'ஒடிஸி'யும், ஜூலை 30-ஆம் தேதி 'ஸ்பைடர்மேன்' படமும் வெளியாவதால், இது வெளியீட்டிற்கு ஒரு சரியான வாரமாகும். ஜூலை 23-ஆம் தேதி வெளியானால், 'ஜன நாயகன்' வெளிநாடுகளிலும் பரவலாக வெளியாகும். தணிக்கை வாரியம் ஏற்கனவே காட்சிகளை வெட்டியும், ஒலியடக்கியும் விட்டது. படக்குழுவினர் தேவையான மாற்றங்களைச் சமர்ப்பித்தவுடன், அடுத்த வாரம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ... Aamir Khan: 61வது வயத்தில் மூன்றாவது திருமணம் செய்யும் ஆமீர் கான்… எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil