Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜப்பானில் வெளியாகும் துரந்தர் 2.. ரன்வீர் சிங் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

ஜப்பானில் வெளியாகும் துரந்தர் 2.. ரன்வீர் சிங் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

TV9 Tamil 1 week ago
ந்தி சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது.
அந்த வகையில் 2025ம் ஆண்டு இறுதி மற்றும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் என அடுத்தடுத்து வெளியாகி சிறப்பான வசூலையும், வரவேற்பையும் கொடுத்த படம்தான் துரந்தர் 1 மற்றும் 2 (Dhurandhar 1 & 2). இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் (Aditya Dhar) இயக்க, ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இரு பாகங்களாக வெளியாகிய இந்த படமானது இதுவரை கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என கூறலாம். இந்த படத்தில் ரன்வீர் சிங், "ஹம்சா" என்ற வேடத்தில் நடிக்க, அவருடன் சாரா அர்ஜுன் (Sara Arjun), சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது கடந்த 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றிருந்த இப்படமானது, ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்ட் பட இயக்குநருடன் இணையும் சியான் விக்ரம்? - வைரலாகும் தகவல்!

ஜப்பானிலும் வெளியாகும் துரந்தர் 2:

ரன்வீர் சிங் உளவாளியாக நடித்து அசத்தியிருந்த படம் துரந்தர் 2. இந்த படமானது இந்தியாவில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 1800 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்றிருந்தது. அந்த வகையில், தற்போது ஜப்பானிலும் வெளியாகவுள்ளதாம். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில், ஜப்பானில் வெளியாகிறதாம். ஜப்பானிய ரசிகர்களுக்காக இப்படம் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்வீர் சிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்.. ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பார்த்த 1.20 கோடி பேர்.. அதிர்ச்சியில் படக்குழு!

துரந்தர் 2 பட ஜப்பானிய வெளியீடு குறித்து ரன்வீர் சிங் வெளியிட்ட வீடியோ :

அந்த வீடியோவில் பேசிய ரன்வீர் சிங், "ஜப்பானில் உள்ள அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். துரந்தர் 2 படமானது வரும் ஜூலை 10ம் தேதியில் ஜப்பானில் வெளியாகிறது. அதீத ஆக்ஷன், எமோஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட படம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய இந்த அனுபவத்தய் திரையில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்" என அதில் அவர் கூறியுள்ளார்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil