Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

TV9 Tamil 2 weeks ago
மிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு பிறகு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு தனது முடி மற்றும் தோற்றம் காரணமாக ம்க்களிடையே பிரபலம் ஆனார். பிறகு அடுத்தடுத்து காமெடிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். தொடர்ந்து இவரது காமெடிகள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது காமெடி படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி நடிகர்கள் கால் ஷீட்டிற்கு காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் யோகி பாபு தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு சிலப் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்

இப்படி இருக்கும் நிலையில் பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் 300-வது படமாக தற்போது உருவாகி உள்ளது அர்ஜுனன் பேர் பத்து. இந்தப் படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், அருள் தாஸ், மைனா நந்தினி, சென்ட்ராயன், அருவி புகழ் மதன், சௌந்தர்யா, செந்தில் ராயன், ஹலோ கந்தசாமி, பாவ லட்சுமணன், லெனின் பாரதி, ரஞ்சன் குமார் மற்றும் சுப்பிரமணியம் சிவா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil