Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

TV9 Tamil 3 weeks ago
ந்திய சினிமாவில் ரசிகர்களால் உலக நாயகன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் நடிகர் கமல் ஹாசன் உலக தரம் வாய்ந்த பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பு மற்றும் படமும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் எந்தப் படம் உருவாகும் என்று தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது?

இயக்குநர் அருண் குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகிறார். 50 வயதுடைய கதாநாயகனை மையமாகக் கொண்டு, நிஜமான இடங்களில் படமாக்கப்படவுள்ள இப்படம், அருண் குமாரின் தனித்துவமான பாணியில் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்காக இயக்குநருக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான முன்-தயாரிப்புப் பணிகள் சாமர்செட் ஹோட்டலில் தொடங்கியுள்ளன. கமல்ஹாசன் ஒரே நேரத்தில் அன்பறிவு படத்திலும் பணியாற்றி வருகிறார். இப்படம் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் கூடிய, முழுமையான அதிரடித் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்படலாம். கமல்ஹாசனின் நேரடிக் கண்காணிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது; இத்திட்டத்தின் மூலம் திரைப்படத் துறையில் புதிய எல்லைகளைத் தொடுவதற்கு அவர் தயாராகி வருகிறார். ... கேரளாவில் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil