இந்தப் படம் தான் நடிகர் தனுஷ் நடிப்பில் 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து நடிகர் தனுஷ் தொடர்ந்து பெருமையாக பேசி வருகிறார். இதன் காரணமாக கர படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். மேலும் படத்திற்கு திரைக்கதையை அவரே எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான படம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் வித்யாசமானதாக இருக்கும் என்று இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கர படத்தின் முன்பதிவை தொடங்கியது படக்குழு:
இந்த நிலையில் படம் வருகின்ற 30-ம் தேதி ஏபரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ... கருப்பு ஆடியோ லாஞ்ச்… புது போஸ்டரை வெளியிட்ட படக்குழுகர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: