தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக உருவாகி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் கருப்பு.
இந்த கருப்பு படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். முதன்முறையாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்காமல் மற்றொரு நாயகனை வைத்து இயக்கிய படம் கருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா சரவணன் என்ற கதாபபாத்திரத்தில் நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பிரீத்தி என்ற கதாபபத்திரத்தில் நடித்து உள்ளார். இவர்கள் இருவருமே இந்தப் படத்தில் வழக்கறிஞர்களாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, இந்திரன், நட்டி சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, மன்சூர் அலி கான், ஜாபர் சாதிக் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது:
இந்த நிலையில் கருப்பு படத்தின் சென்சார் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது மற்ற படங்களைப் போலவே எங்களுக்கும் பொதுவான வெட்டுக்களும் ஒலியிழப்புகளும் கிடைத்தன. ஆனால் இந்தப் படத்தின் கருப்பொருள் வலுவானது. பொதுவாக, படத் தணிக்கையைப் பார்த்தவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை நான் கண்டேன். அவர்கள், எங்களுக்குப் படம் பிடித்திருந்தது நாங்கள் படத்தை ரசித்தோம், ஆனால் எங்கள் உத்தரவின்படி என்று கூறினார்கள். படத்தில் நான் மிகவும் கவனமாகச் செய்த சில விஷயங்களை மாற்றுமாறு அவர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நான் விரும்பியதைப் பெறுவதற்காக அவர்களுடன் போராட முயன்றேன். மாற்ற வேண்டிய சில சிறிய விஷயங்கள் இருந்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக, அது ஒரு நியாயமான தணிக்கையாக இருந்தது. அவர்கள் கருப்பொருளைப் புரிந்துகொண்டார்கள். படத்தில் இருந்த சாராம்சத்தை அவர்கள் பாராட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

