நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மொழிகளிலும் நடிகர் சூர்யாவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் 45-வது படமாக உருவாகி உள்ளது கருப்பு (Karuppu Movie). தமிழ் மொழியில் உருவாகி உள்ள இந்தப் படம் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இந்திரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கருப்பு படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு:
கருப்பு படத்திற்கு தெலுங்கு மொழியில் வீரபத்ருது என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று தமிழ் மொழியில் ட்ரெய்லர் வெளியான நிலையில் இன்று தெலுங்கு மொழியில் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மேலும் இன்று ஹைதராபாத்தில் கருப்பு படத்தின் ப்ரிவியூ ஷோ நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ... காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை - தமன்னா பாட்டியாகருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;