நடிகை தமன்னா பாட்டிய பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார்.
காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை:
காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழும் ஒன்றல்ல; அது பலமுறை நிகழக்கூடும். இன்றைய உலகில், காதல் மற்றும் உறவுகள் என்பவற்றின் உண்மையான பொருள் என்ன என்பது குறித்துப் பலரும் குழப்பமடைந்துள்ளனர். காதல் என்பது ஒரு பரிவர்த்தனையாக மாறிவிடும் அபாயம்கூட இன்று நிலவுகிறது. நீங்கள் ஒருவரை உண்மையாகவே நேசிப்பீர்களெனில், அவர்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களையோ எதிர்பார்ப்புகளையோ மற்றவர் மீது திணிப்பதன் மூலம் காதலை ஒருபோதும் நிரூபித்துவிட முடியாது. காதல் என்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழும் அனுபவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது பலமுறை தோன்றக்கூடிய ஓர் உணர்வாகும். அந்த உணர்வு வெளிப்புறக் காரணிகளால் உருவாவதல்ல; மாறாக, அது நம்முடைய அகத்திலிருந்து, நமக்குள்ளிருந்தே பிறப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... மமிதா பைஜூவை அப்போதே இரண்டு வானம் படத்திற்காக ஒப்பந்தம் செய்தோம்- இயக்குநர் ராம் குமார் பேச்சு!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

