Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருவாடு மட்டும் போதாது. தாய்ப்பால் பெருக இதையெல்லாம் சாப்பிடுங்க!

கருவாடு மட்டும் போதாது. தாய்ப்பால் பெருக இதையெல்லாம் சாப்பிடுங்க!

TV9 Tamil 2 days ago
பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கப் பாரம்பரிய உணவுகளோடு சேர்த்துப் பலதரப்பட்ட சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக அவசியமாகும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு வழக்கத்தை விடத் தினமும் சுமார் 450 முதல் 500 கலோரிகள் வரை கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. உடலின் ஆரோக்கியத்தைப் பேண வைட்டமின் ஏ, டி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்க்க வேண்டும். தினை, கேழ்வரகு போன்ற முழுத் தானியங்கள் மற்றும் மீன், முட்டை, பருப்பு போன்ற புரதச்சத்து உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உடலின் கால்சியம் அளவைத் தக்கவைக்கப் பால் பொருட்கள் அல்லது கீரைகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. : குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவே கூடாத 7 உணவுப் பொருட்கள் என்ன?

பாரம்பரிய உணவுகளும் தாய்ப்பாலின் யதார்த்தமும்

குழந்தை பிறந்ததும் நமது ஊர்களில் கருவாட்டுக் குழம்பும் முருங்கக்காயும் தான் தாய்ப்பால் அதிகம் சுரக்கச் செய்யும் முக்கிய உணவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும், பாரம்பரிய வழிமுறைகள் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதில் உதவினாலும், அவை மட்டுமே தாய்க்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளையும் வழங்கிவிட முடியாது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தாயின் உடல் நலம் காப்பதற்கும் பலவகையான சீரான சத்து நிறைந்த உணவுகளை தினசரிப் பட்டியலில் இணைத்துக்கொள்வது அவசியமாகும்.

தாய்ப்பால் கொடுக்கும் காலத்திற்கான கூடுதல் கலோரிகள்

குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழக்கமான நாட்களைக் காட்டிலும் அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது. தினமும் ஏறத்தாழ 450 முதல் 500 கலோரிகள் வரை கூடுதலாக உட்கொள்வது தாய்ப்பால் சுரப்பைத் தடையின்றி சீராக வைத்திருக்க உதவும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உணவு வகைகளின் அளவைக் திடீரெனக் குறைப்பதற்கு முன்பு மருத்துவரின் தகுந்த ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.

தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சத்துக்கள்

வைட்டமின் ஏ, டி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசியச் சத்துகள் இக்காலத்தில் மிக அவசியமானவை. நார்ச்சத்துமிக்க பழங்கள் மற்றும் கீரைகள், கேரட், தக்காளி போன்ற காய்கறிகளை தினமும் குறிப்பிட்ட அளவில் சாப்பிட வேண்டும். மேலும், முழு கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்ற புரத உணவுகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது தாயின் உடலையும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. : குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவே கூடாத 7 உணவுப் பொருட்கள் என்ன?

நீர்ச்சத்தின் அவசியமும் எளிமையான சமையல் முறைகளும்

குழந்தையை அரவணைக்கும் மும்முரத்தில் பல தாய்மார்கள் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவதுண்டு, இது சோர்வையும் நீர்ச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். எனவே அறைகளில் தண்ணீர் பாட்டில்களை அருகில் வைத்துக்கொள்வதுடன், பால் கொடுக்கும் நேரங்களில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். பிரசவத்திற்குப் பிந்தைய ஆரம்ப நாட்களில் ஓய்வு குறைவாக இருக்கும் வேளையில், எளிமையான ஸ்மூத்திகள், ஓட்ஸ் கஞ்சி மற்றும் உலர் பழங்களை உட்கொண்டு ஊட்டச்சத்தைப் பராமரிக்கலாம்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil