பரீதாபாத், மே 23 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், பிவாடி பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மோனு என்ற 21 வயது இளைஞர்.
காதல் விவகாரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பேட்மிண்டன் வீரர்
இந்த இளைஞர், பரீதாபாத் நகரில் உள்ள திகாவன் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அந்த இளைஞர், ஒரு கட்டத்தில் சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். இது தொடர்பாக ஏப்ரல் மாதம் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை மீட்டுள்ளனர். ஆனால், சிறுமியின் காதலன் மோனு காணாமல் போயுள்ளார். 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த குடும்பம்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மோனு - சிகிச்சை பலனின்றி பலி
இந்த விவகாரத்துக்கு பிறகு மோனு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால், வெளியே சென்ற அவர் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். அவரை குடும்னத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது மோனு, அவர் காதலித்த சிறுமியின் வீட்டின் முன்பு படுகாயங்களுடன் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோனுவை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து… 'டெய்ல் ஸ்ட்ரைக்' குறித்து பரபரப்பு தகவல்! ஆனால், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கூறிய மோனுவின் குடும்பத்தார், சிறுமியின் பெற்றோர் மோனுவை கடத்தி சென்று அடித்து, துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
