ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் அடையாளமாக நடிகர் தனுஷ் உள்ளார். மேலும் நடிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்கி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். தனுஷ் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றதோ அதே போல அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த கர படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. கோயம்புத்தூர் மக்களே ரெடியா?
மேலும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஸ்ஷனல் சார்பாக தயாரித்து இருந்தார். மேலும் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று படத்தின் ப்ரிவியூ நிகழ்ச்சி கோயம்புத்தூரில் உள்ள ப்ரோசோன் மாலில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ... நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழுகர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: