Dailyhunt
நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

TV9 Tamil 4 months ago
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரைத் தொடங்கியவர் ரியோ ராஜ். இவர் அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போதே ரியோ ராஜிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் இருக்கும் போதே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் ரியோ ராஜ் வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய போது அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இறுதியாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 3 படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக இறுதியாக வெளியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ரொமண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் பல சீரியசான விசயங்களை மிகவும் காமெடியாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் போலி பெண்ணியம் பற்றி விளக்கமாக இந்தப் படத்தில் பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட் இதோ:

இந்த நிலையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் 6-வதாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை 1-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு காலை 11:11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா

படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil