இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் வயதான தம்பதியின் காதலை மிகவும் அழகாக காட்டி இருப்பார் எஸ்.யு.அருண்குமார். படம் மிகவும் ஃபீல் குட்டாக இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2016-ம் ஆண்டு வெளியான சேதுபதி மற்றும் 2019-ம் ஆண்டு வெளியான சிந்துபாத் ஆகிய இரண்டு படங்களையும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கி இருந்தது குறிப்பிடித்தக்கது. இதில் சேதுபதி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான சிந்துபாத் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் நடிகர் சித்தார்தை வைத்து சித்தா என்ற படத்தை இயக்கி இருந்தார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் அழுத்தமான கதையை மக்களுக்கு மிகவும் நேர்த்தியாக இயக்குநர் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. மீண்டு இணையும் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.யு.அருண்குமார் கூட்டணி:
வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முன்னதாக வெளியான நிலையில் முதல் பாகம் அடுத்ததாக வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான செய்தியின்படி இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்கள் கூட்டணி 4-வது முறையாக இணைய உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் வீர தீர சூரன் படம் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ... குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு: