Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் தள்ளிபோகிறதா கருப்பு படம்? இது என்ன புது ட்விஸ்டா இருக்கு

மீண்டும் தள்ளிபோகிறதா கருப்பு படம்? இது என்ன புது ட்விஸ்டா இருக்கு

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி உள்ளது கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டே தொடங்கிய இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாவதாக இருந்தது.
ஆனால் பல சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போனது. இது சூர்யாவின் ரசிகர்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. இப்படி இருக்கும் சூழலில் அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு கருப்பு படம் ஒரு வலியாக வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த 2026-ம் ஆண்டு சூர்யாவின் ரசிகர்கள் 1 அல்ல 2 அல்ல மூன்று ட்ரீட் காத்திருக்கின்றது என மகிழ்ச்சியில் இருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தப் படம் தற்போது அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து வெளியிட திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டால் கருப்பு படத்தின் வெளியீடு தள்ளிபோக வாய்ப்பு உள்ளதா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மீண்டும் தள்ளிபோகிறதா கருப்பு படம்?

கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பிலிருந்து 'துருவ நட்சத்திரம்' வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மே 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது; இருப்பினும், சூர்யாவின் படமான 'கருப்பு'டன் இப்படம் ஒரே நேரத்தில் மோதக்கூடும் என்ற கவலை நிலவுகிறது. எனவே, 'கருப்பு' படத்தின் வெளியீட்டை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடியுமா என்பது குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்பேச்சுவார்த்தை கைகூடாத பட்சத்தில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டை மே 22-க்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போட வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Karuppa: அய்யா கருப்பனே வாருமையா…. அதிரடி இசையில் வெளியானது கருப்பு படத்தின் கருப்பா கூட வா பாடல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil