தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகரான நடிகர் ராம் சரண் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜயை புகழ்ந்து பேசிய நடிகர் ராம் சரண்:
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண் முதலமைச்சர் ஜோசப் விஜயை பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக பெத்தி படம் தெலுங்கு சினிமாவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன்படி சென்னையில் இன்று நடைப்பெற்ற புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராம் சரண் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அதனை விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... H Vinoth: ஜன நாயகன் எப்போ சார் வரும்? - இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!இணையத்தில் வைரலாகும் ராம் சரண் பேச்சு:

