Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை - சமுத்திரக்கனி

நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை - சமுத்திரக்கனி

TV9 Tamil 0 months ago
மிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமுத்திரகனி. இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் போதே இவரது இயக்கத்தில் வெளியாகும் சீரியல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் படங்களை இயக்கியும் படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும், குணசித்திர வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி நடிகர் சமுத்திரகனி தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் நடிகர் சமுத்திரகனி வில்லன் வேடத்தையே அதிக அளவில் ஏற்று நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சமுத்திரகனி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அந்தப் பேட்டியில் தனது இயக்கத்தில் வெளியான நாடோடிகள் என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுப்பதற்கு தான் எவ்வளவு சிரமங்களை கடந்து வந்தேன் என்று வெளிப்படையாக பேசி இருப்பார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை:

நான் 'நாடோடிகள்' படத்தின் கதையை பலரிடம் கூறினேன், ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஒரு நாள், 'சுப்ரமணியபுரம்' படப்பிடிப்புத் தளத்தில் வைத்து சசிகுமாரிடம் 'நாடோடிகள்' படத்தின் திரைக்கதையை விவரித்தேன். அவரே அந்தப் படத்தைத் தயாரிப்பதாகக் கூறினார். இருப்பினும், அக்காலகட்டத்தில் நடிகர் ஜெய் ஏற்கனவே பல படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால், அவரால் இந்தப் படத்தில் இணைய முடியவில்லை. பின்னர், சசிகுமாரையே இப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆரம்பத்தில் அவர் அது குறித்து யோசித்தார். ஆனால் 'சுப்ரமணியபுரம்' வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு, நாங்கள் உடனடியாக 'நாடோடிகள்' படப்பிடிப்பைத் தொடங்கினோம் என்று சமுத்திரகனி தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ... Hi Movie: காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.. இல்ல கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கும்.. நயன்தாரா - கவினின் ஹாய் பட ட்ரெய்லர் வெளியானது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil