தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன?
இந்த நிலையில் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தனுஷின் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னையில் உள்ள பிரபல மாலில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. நடிகர் மம்முட்டியின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ... கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

