தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நேற்று கனி.. இன்று வினோத் - தொடர்கிறது பார்வதியின் சண்டை லிஸ்ட்!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு போட்டியாளர் பார்வதி மட்டும் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இது குறித்து வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினாலும் அடுத்த நாளே அதனைத் தொடர்கிறார். அதன்படி இந்த வாரம் தொடங்கிய நேற்று திங்கள் அன்று கனி உடன் பார்வதி சண்டையிட்டார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவைப் பார்க்கும் போது வீட்டில் உள்ள மற்றோரு போட்டியாளருடன் சண்டையிடுவது தெரிகிறது. இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பார்வதியை பிக்பாஸ் வீட்டிற்குள் பார்ப்பதற்கே டாக்ஸிக்காக உள்ளது. அவரின் செயலை தொடர்ந்து பார்க்கையில் எரிச்சல் மூட்டுவதாக உள்ளது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ... உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படம் - எந்த ஓடிடியில் பார்க்கலாம்!பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

