Dailyhunt
ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!

ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!

TV9 Tamil 4 months ago
மிழ் சினிமா மட்டும் இன்றி உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
சினிமாவில் வெள்ளையாக இருப்பவர் நாயகனாகவும் கருப்பாக இருப்பவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாதா விதி இருந்த காலத்திலேயே தனது ஸ்வாகான ஸ்டைல் காரணமாக வில்லன் கதாப்பாத்திரங்களில் இருந்து நாயகனாக உருவெடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். நீ நடந்தால் நடை அழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு... என்று இவரது நடிப்பில் வெளியான பாடலைப் போல ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் மிகவும் ஸ்டைலான நடை பேச்சு என ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்தவர்தான் இவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் தட்டிதடுமாறி தற்போது தனக்காக ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்துள்ளதற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதனை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரஜினிகாந்த் பிறந்த நாளில் வெளியாகும் புது அப்டேட்கள்:

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது 172-வது படமான ஜெயிலர் 2 மற்றும் தலைவர் 173 படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அவரது 75-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அந்த பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் 2 மற்றும் தலைவர் 173 ஆகிய படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ... ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil