நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் (Actor Sathyaraj) நடிகர் ரஜினிகாந்தின் உயிர் தோழனாக நடித்து இருந்தார்.
சத்யராஜ் சொன்ன விசயம் என்ன தெரியுமா?
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, சிவாஜி படத்தில் தான் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க கேட்டனர். அப்போது எனது மார்கெட் தொடர்ந்து சரிந்துகொண்டு இருந்த நேரம். நாயகனாக ஒரு படமாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்தே. அந்த நேரத்தில் வில்லனாக அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் இயக்குநர் சங்கரிடம் கூறினேன். சார் நான் இப்போ ரொம்ப சிரமபட்டுட்டு இருக்கேன் நாயகனாக ஹிட் கொடுக்க அதனால் என்னால் இந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க முடியாது என்று தெரிவித்தேன். அதனால் தான் அந்தப் படத்தில் நடிக்க மறுத்தேன் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!கூலி படத்தின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு இதோ:

