தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ குமார். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இயக்கி வந்தார்.
ராமாயணா பட டிரெய்லரைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன்:
இந்த நிலையில் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் அட்லி குமார் சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த எக்ஸ் தள பதிவில் அட்லி குமார் பேசியதாவது, ராமாயணம் ட்ரெய்லர் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது! நமித் மல்ஹோத்ரா அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், நிதேஷ் திவாரியின் அற்புதமான கைவண்ணமும் பிரமிக்க வைக்கின்றன. யாஷ் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார், ரன்பீர் கபூர் அசத்தலாக இருக்கிறார், சாய் பல்லவி தேவதை போல ஜொலிக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாகவும், புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், மாயாஜாலம் போலவும் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள். இது உண்மையிலேயே ஒரு காவியமாக அமையப்போகிறது. ... தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? - வெளியானது அறிவிப்பு!இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

