Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sivakarthikeyan: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

TV9 Tamil 1 month ago
டிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார்.
இவரின் நடிப்பில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில், பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, தற்போது சேயோன் (Seyon) என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் நடித்து வெற்றியை பெற்றிருந்த திரைப்படம்தான் அமரன் (Amaran). இந்த படமானது, 2024ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) அறிவிப்பில், கிட்டத்தட்ட 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அந்த வகையில் இப்படக்குழுவிற்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்து சிவகார்த்திகேயன் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தேசிய விருதுகள் வென்ற மற்ற பிரபலங்களுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநராக எனது முதல் தேசிய விருது.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி - தனுஷ்!

அமரன் படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்:

அந்த பதிவில், "எங்கள் அமரன் குடும்பத்தின் முழு பெருமைக்குரிய நாள். 72வது தேசிய திரைப்பட விருதுகள் 2024ல் சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றுள்ளார். சிறந்த யோசையமைப்பாளர் என்ற விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களுக்கும், சிறந்த படத்தொகுப்பிக்கான் விருதை பெற்ற கலைவண்ணன் அவர்களுக்கும் என்னது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சன் பிக்ச்சர்ஸ், தனுஷ், அருண் மாதேஸ்வரன், அனல் அரசு சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என ஆதில் அவர் கூறியுள்ளார். யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? - வைரலாகும் தகவல்!

அமரன் படக்குழு தேசிய விருதுகளை வென்றதற்கு வாழ்த்து சொல்லி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு:

தமிழ் சினிமாவில் தனுஷ் கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார், அமரன் படக்குழுவும் மொத்தம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இதுபோல தொடர்ந்து மூன்று விருதுகளை தமிழ் மற்றும் பாலிவுட் சினிமா மட்டுமே பெற்றுள்ளது. இந்த விருது அறிவிப்புகள் கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விருது வழங்கும் விழா வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil