கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து பின் துணை வேடம், நடிகர் மற்றும் இயக்குநர் என அடுத்தடுத்தகட்டத்திற்கு படி படியாக வளர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji).
அஜித் குமாருடன் படத்தில் இணைவது பற்றிய தனது கருத்த சொன்ன ஆர்.ஜே.பாலாஜி:
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அவரிடம் "நீங்கள் எப்போது உங்கள் இயக்கத்தில் அஜித் சாரை வைத்து படம் எடுக்கப்போகிறீர்கள்? என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, ஆர்.ஜே.பாலாஜி, "அதை பற்றி என்னால் எந்த பிளானும் சொல்ல முடியாது. குறிப்பாக அஜித் குமார் சாருக்காக ஒரு படத்தின் கதை எழுதினாலும், அவருக்காக நான் மிக சிறப்பாக எழுதியிருந்தாலும், அது நடக்குமா அல்லது நடக்காதா? எனக்கு தெரியாது. கட்டா குஸ்தி 2 முதல் டார்க் வரை… தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! நான் என் எழுத்து பணியையும், வேலையையும் செய்வேன். அது அஜித் குமாருக்கு பிடித்து, அவருடன் படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன்" என அதில் அவர் கூறியுள்ளார்.அஜித் குமாருடன் படத்தில் இணைவது பற்றிய தனது கருத்தை ஆர்.ஜே.பாலாஜி சொன்னது தொடர்பான பதிவு:
தற்போது ஆர்.ஜே.பாலாஜி புதிய படத்திற்காக கதை எழுதும் பணியில் இருக்கிறாராம். மேலும் அவர் நடிகராகவும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இணையும் புது ஹீரோ மற்றும் இயக்குநர் யார் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

