Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியானது இதயம் முரளிப் படத்தின் ட்ரெய்லர்

ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியானது இதயம் முரளிப் படத்தின் ட்ரெய்லர்

TV9 Tamil 3 weeks ago
மிழ் சினிமாவி பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா முரளி. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக வெளியாக உள்ள படம் இதயம் முரளி. முன்னதாக இவர் பராசக்தி படத்தில் இரண்டாம் நாயகனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் அவர் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இதயம் முரளி. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த இதயம் முரளி படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் தயாரிப்பாளராக பலப் படங்களை தயாரித்து இருந்த நிலையில் தற்போது இயக்குநராக இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்காள் ஃபஹத் பாசில், ப்ரீத்தி முகுந்த், கயாடு லோகர், நட்டி சுப்ரமணியம், தமன் எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷாஸ்ரீ, ஜோனிதா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது அதர்வாவின் இதயம் முரளிப் படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... ஜேசன் சஞ்சயுடன் மோதும் விஜய்.. ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil