தென்னிந்திய சினிமாவில், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay).
தவெக தலைவர் விஜய் குறித்து அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ பதிவு:
தவெக தலைவர் விஜய் முன்னிலை குறித்து பேட்டியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்:
அந்த பேட்டியில் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசுகையில், "விஜய்யை எப்போதும் ஊக்கப்படுத்துவேன். அவரும் ஒரு நடிகராக இல்லாமல் சமூகத்தின் மீது அக்கக்காய் உள்ளவராகவும் இருந்திருக்கிறர். அவரின் மனதிலும், இந்த சமூகத்திற்காக எதாவது செய்யவேண்டும் மற்றும் தமிழ் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. மெதுவாக, அவர் இவற்றை வளர்த்தெடுத்தார். இன்று, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் போகிறார். தமிழ் மக்கள் அவரை ஒரு தலைவராக மட்டுமல்லாமல், அவரை நேசித்தார்கள். சொகுசு கார்கள்.. ரியல் எஸ்டேட் உட்பட.. தவெக தலைவர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு பெண்ணும் அவரைத் தன் சொந்த மகனாகக் கருதுகிறார்கள். இளைஞர்கள் அவரைத் தங்கள் அண்ணனாக கருதுகிறார்கள். எல்லோரும் அவரை அண்ணா என்று அழைக்கிறார்கள். வயதான பெண்கள் அவரைத் தங்கள் சொந்த மகனாகக் கருதுகிறார்கள். சில 60 வயதுப் பெண்கள் அவரைத் தங்கள் பேரனாகக் கருதுகிறார்கள். தனக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான அந்த உறவை அவர் வளர்த்துவந்தார். விஜய் நிச்சயம் தமிழகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை செய்வார் என அதில் அவர் பேசியிருந்தார் .
