தமிழ் சினிமாவில் சின்ன சின்ன காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் சந்தானம். அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நண்பனாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
சந்தானத்தின் புதுப் படத்தின் டைட்டில் லவ் பைட்:
அதன்படி பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடிகர் சந்தானத்தின் படத்தை தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அபரிமிதமான திறமை கொண்ட திரு. சந்தானம் அவர்களும், எங்கள் நிறுவனத்தின் இயக்குனரான செல்வின்ராஜ் சேவியர் அவர்களுடன் இணைந்து எங்களின் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படம், அற்புதமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையுடன், மிகுந்த கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமையும் இந்த லவ் பைட் படம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ... Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

