சென்னை, ஏப்ரல் 6 : சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏப்ரல் 6, 2026 இன்று வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய 4 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து
அந்த வகையில் தனித்து களம்காணும் தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் விஜய்யால் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து வீடியோ மூலம் 234 தொகுதி வேட்பாளர்களுக்காகவும் விஜய் வாக்கு சேகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஏப்ரல் 6, 2026 அன்று வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகாயநகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வில்லிவாக்கம் மற்றும் தியாகராயர் நகர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி வில்லிவாக்கம் தொகுதியில் மதியம் 12 மணி முதல் மணி வரையும் தியாகராயநகர் தொகுதியில் 2 முதல் 3 மணி வரையும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.காரணம் என்ன?
இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் 1 மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்ய போதுமானதாக இருக்காது என அக்கட்சி நிர்வாகிககள் தலைமையிடம் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்து விட்டு மற்றொரு இடத்திற்கு செல்ல காலதமாகிவிடும் என்பதால் இந்த முடிவெடுக்கப்ட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
