இந்தியாவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் மட்டும் கூடுதல் கவனம் பெற்றிருப்பதற்கு காரணம் முதன்முறையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்பது தான்.
ராஜ்மோகனின் சொத்துமதிப்பு இவ்வளவா?
அந்த வகையில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் போட்டியடவிருக்கிறார். இந்த நிலையில் அவர் ஏப்ரல் 5, 2026 அன்று எழும்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். தற்போது அது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் அவர் வருமான வரி செலுத்திய விவரங்களையும் வெளியிட்டிருக்கிறரார்.அதில் தனது வருமானத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2020 -21 நிதியாண்டில் 7,35,45 ரூபாயும், 2021 - 22 நிதியாண்டில் 8,09,420 ரூபாயும், 2022 - 23 நிதியாண்டில் ரூ.11,38,610 ரூபாயும், 2022 - 23 நிதியாண்டில் ரூ. 11,38,610, 2023 - 24 நிதியாண்டில் 9,20,360 ரூபாயும், 2024 - 25 நிதியாண்டில் 23,70,280 ரூபாயும் வருமானமாக பெற்றிருக்கிறார். மேலும் ராஜ்மோகனின் கையில் ரூ.1,00,000, அவரது மனைவியிடம் ரூ.10,000 ரொக்கமாக இருப்பதாகவும் இவர்கள் இருவரது கணக்கில் ரூ.1,20,000 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ராஜ்மோகன் தன் பெயரில் ரூ.10,00,000 லட்சத்துக்கு எல்ஐசி பாலிசி எடுத்திருக்கிறார். மேலும் யாருக்கும் கடன் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ராஜ்மோகனிடம் 400 கிராம் தங்கம் இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ.54,00,000 என்றும் வெள்ளி 2 கிலோ இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ.4,9,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவியிடமும் 400 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்பில் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பைர் ,கார் ஒன்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.7 லட்சம் மதிப்பில் 1,200 சதுர அடி நிலம் வைத்திருக்கிறார். குடியிருப்பு வளகாத்தில் அவருக்கு 583 சதுர அடி மதிப்பில் வீடு உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.39 லட்ச ரூபாய் ஆகும். மேலும் எச்டிஎஃப்சி வங்கியில் அவருக்கு ரூ. 27 லட்சத்துக்கு கடன் பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

