தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ள படம் அரசன். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட்:
நடிகர் சிலம்பரசனின் 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சிம்பு, சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுடன் படக்குழு தொடங்க உள்ளது. நாயகி தேர்வு செய்வதற்கன பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்தில் இரண்டு பெண் கதாநாயகிகள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. படப்பிடிப்பின் இரண்டாவது கட்டத்தின் போது இந்த கதாநாயகிகள் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... LIK படம் கடந்து வந்த பாதை என பதிவை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் - வைரலாகும் பதிவு!இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

