Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள் - வைரலாகும் தகவல்

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள் - வைரலாகும் தகவல்

TV9 Tamil 1 month ago
மிழ் சினிமாவில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான உழைப்பாளி என்ற படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகம் ஆனார் ராகவா லாரன்ஸ்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களுக்கு இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதன்படி நடிகர்கள் அர்ஜுன், அஜித், விஜய், ரஜினிகாந்த் என பலருக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2014-ம் ஆண்டு வரை நடன இயக்குநராக பணியாற்றி வரும் போதே தொடர்ந்து பலப் படங்களில் கேமியோ நடனம் ஆடி வந்தார். அதனைத் தொடர்ந்து நாயகனாகவும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து வந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நாயகன், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இறுதியாக ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து இறுந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்ததாக அவரது நடிப்பில் பென்ஸ் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது.

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ் மகள்:

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் என்ட்ரி கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் மகளும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் மகள் ராகவி, இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். ராகவி அமெரிக்காவில் இயக்கம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்பைப் பயின்றதாகவும், உதவி இயக்குநராகப் பணியாற்றாமலேயே நேரடியாகத் திரையுலகில் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது முதல் திரைப்படத்தை ராகவா லாரன்ஸே தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரன்ஸ் ஏற்கனவே தனது தம்பியான எல்வின் லாரன்ஸின் திரையுலகக் கனவுகளுக்குத் துணை நின்று வருகிறார். எல்வின் தற்போது கதாநாயகனாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ... அஸ்வத் மாரிமுத்து பர்த்டே… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ராஜ் கமல் ஃபிலிம்ஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil