Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? - வைரலாகும் தகவல்!

Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? - வைரலாகும் தகவல்!

TV9 Tamil 1 month ago
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர் ராக்ஸ்டார் யாஷ் (Yash).
இவரின் நடிப்பில் இறுதியாக கேஜிஎப் 2 (KGF 2) திரைப்படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து, கிட்டத்தட்ட 2 ஆண்டுகாலமாக யாஷ் நடித்துவந்த புது படம்தான் டாக்ஸிக்(Toxic). இதை மலையாளம் பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, அவருடன் யாஷ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் யாஷ், ரயா மற்றும் ராக்கெட் என இரு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகைகள் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani), ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் (Rukmini vasanth) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது விபரம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில், இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. ரிலீஸ் எப்போது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம். அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் - அதர்வா!

டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:

நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் மீது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இப்படமானது தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியை பெங்களூருவில் படக்குழு மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது இதற்கான பணிகள் நடைபெற தொடங்கியுள்ளதாம்.

டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:

யாஷின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டு காத்திருப்பிற்கு பின் வெளியாக தயாராகியிருக்கும் படம்தான் டாக்ஸிக். இதில் பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்களாம். இப்படமானது அதிரடி கேங்ஸ்டர் படமாக இருந்தாலும், அதிகம் பெண்ணியம் சார்ந்த கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நயன்தாரா மற்றும் கியார அத்வானி இருவருமே மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்களாம். நிவின் பாலி - மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ! இப்படத்திலிருந்து இதுவரை தபாஹி என்ற ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இன்னும் சில பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்படத்திலிருந்து தொடர்ந்து புது அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil