தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா?
சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாகத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இப்பணி 2028-ஆம் ஆண்டில்தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர் மடோன் அஸ்வின் நடிகர் கார்த்தியிடமும் ஒரு கதைக்கருவைக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... பவர் பேக் ஆக்ஷன்.. தனது 38வது படத்திற்கு மாஸாக தயாராகும் அருண் விஜய்!இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

