Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சூர்யா படத்துடன் மோதுகிறதா ஜன நாயகன் படம்?

சூர்யா படத்துடன் மோதுகிறதா ஜன நாயகன் படம்?

TV9 Tamil 1 week ago
மிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் படம் ஜன நாயகன். பல புதுப் படங்கள் வாரம் வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகி வந்தாலும் இந்த ஜன நாயகன் என்ற படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று ஒட்டுமொத்த தமிழ் சினிமா மக்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களும் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து சென்சார் பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள இந்த ஜன நாயகன் படத்திற்கு தற்போது தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் ஒரு பக்கம் பரவி வரும் நிலையில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக உருவான படம் என்பதால் இந்தப் படத்தின் மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜன நாயகன் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது புது தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா படத்துடன் மோதுகிறதா ஜன நாயகன் படம்?

'ஜன நாயகன்' படக்குழு ஜூலை 24 அன்று படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அடுத்த வாரத்திற்குள் படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால், வெளியீட்டை ஆகஸ்ட் 13 அல்லது 14-ஆம் தேதிக்கு மாற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்; இதனால் சுதந்திர தின வார இறுதியில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். ஏனெனில், ஜூலை 31 அன்று 'ஸ்பைடர் மேன்' படம் வெளியாகவுள்ளதால், அது உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளைக் கைப்பற்றிக்கொள்ளும் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ... அரசன் இதுவரை இல்லாத பெரிய வசூல் சாதனை படைக்கும் - தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil