தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனாக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இவர் சிறு வயதில் இருந்தே இசையை ஆர்வத்துடன் கற்று வந்த நிலையில் முன்னதாக ஆல்பம் பாடல்களை உருவாக்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனார்.
தளபதி விஜய் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது:
இந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி சாய் அபயங்கர் பேசியதாவது, தளபதி விஜய் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் எனக்கு ஒரு நடிகரைத் தாண்டிய ஒருவர். அவரது படைப்புகள் எனக்கு முழுமையான திருப்தியைத் தரும். அவர் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது. அவர் சினிமாவை விட்டு வெளியேறுகிறார், நாங்கள் அவரை அதிகமாக மிஸ் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. ... சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கர் பேச்சு:

