மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மானும் முன்னனி நடிகராக உள்ளார்.
சென்னையில் வாக்களித்த நடிகர் துல்கர் சல்மான்:
இந்த நிலையில் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் துல்கர் சல்மான் கடந்த 9-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த புகைப்படத்தை போடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அன்று முழுவதுமே துல்கர் சல்மான் வாக்களித்ததற்கான வீடியோ அல்லது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அவரது தந்தை நடிகர் மம்முட்டி மற்றும் தாய் இருவரும் வாக்களித்த வீடியோ வெளியாகி இருந்தது. ஆனால் இன்று 23-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் துல்கர் சல்மான் முழுவதுமாக தமிழகத்திற்கு குடிபெயர்ந்துவிட்டாரா என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ... நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் - 15 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜீவாவின் கோ படம்!இணையத்தில் வைரலாகும் போட்டோ:

