Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பில்லை. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

TV9 Tamil 3 weeks ago
மிழகத்தில் தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, 7 சட்டமன்ற தொகுதிகளின் எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர்களின் வெற்றிகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாதிகாரி, அருள் முருகன் அமர்வு தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது, அரசு பணம் செலவிடப்படுவது, ஒரு தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது.

செப். 8 வரை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை

எனவே, 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இதில், தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலர், முதல்வர் விஜய் மற்றும் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 24) நடைபெற்றது. அப்போது, சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை செப்டம்பர் 8- ஆம் தேதி வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  'வெற்றி பயணம்'.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

தேர்தல் வழக்கு முடியும் வரை அறிவிக்க திட்டமில்லை

இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்க திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தற்போதைக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு இருக்காது என்றே தெரிகிறது. சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் விவகாரம்

இதே போல, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), இசக்கி சுப்பையா ( அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் ( பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம். ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் அடுத்தடுத்து தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று தொடர்ந்து வழக்கில் தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.  ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil