ஒட்டுமொத்த தமிழகமே இன்று பரபரப்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக (2026 Assembly Elections) தங்களின் வாக்குகளை செலுத்திவருகின்றனர்.
நடிகர் சிலம்பரசன் வாக்களித்தது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ:
மேலும் தமிழ் நடிகர் விஷாலும்(Vishal) தனது வாக்கை செலுத்தியுள்ளார். அவர் தனது சைக்கிள், சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, தனது வாக்கை செலுத்தியிருந்தார். அவர் மகுடம் படத்தின் ஷூட்டிங்க்காக காக்கிநாடாவிற்கு சென்றிருந்த நிலையில், தனது ஜன நாயகக் கடமையை செய்வதற்காகவே வந்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காமெடியாக பேசியும், அனைவரும் நிச்சயமாக வாக்குகளை செலுத்தவேண்டும் என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் பேசியது தொடர்பான வீடியோ:
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்
தனது வாக்கு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
நடிகை சிம்ரனும் (Simran) தனது வாக்கை செலுத்தியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் அவர், "டிராமாவை தவிர்த்து, யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இது ஒரு வாக்குச்சாவடி, சினிமா ஷூட்டிங் அல்ல, வாக்களிக்கவரும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட" என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

