Dailyhunt
தனுஷ்  - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

தனுஷ் - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

TV9 Tamil 0 months ago
மிழ் சினிமவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது தனது 55-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி அந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கி வரும் நிலையில் படத்டில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தனுஷ் 55 படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள நிலையில் அந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷ்  - தமிழரசன் பச்சைமுத்து படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

தனுஷ் அடுத்ததாக, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் 'புஷ்பா' படத்தைப் போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. ... ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை - வைரல் போட்டோ குறித்து பேசிய கயடு லோஹர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: TV9 Tamil