இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), அடுத்த ஒரு வருடத்திற்கான இந்திய அணியின்(Indian Cricket Team) சர்வதேச போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் உள்நாட்டு தொடர் யாருடன்..?
இந்திய அணியின் முதல் உள்நாட்டு தொடரானது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் தொடங்குகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 17 வரை நடைபெறும். அப்போது இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். இதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 2 மாதங்களுக்குப் பிறகு, இலங்கை அணி இந்தியாவிற்கு வருகை தந்து வருகின்ற 2026 டிசம்பர் 13 முதல் 27 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 2027 ஜனவரி மாதத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2026 ஜனவரி 3 முதல் 9 வரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். ஆஸ்திரேலிய அணியும் 2026 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை தரும். இரு முன்னணி அணிகளுக்கும் இடையே 2026 ஜனவரி 21 முதல் 2026 பிப்ரவரி 27 வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.
இந்தியாவின் அட்டவணை (உள்நாட்டுத் தொடர்கள்)
- வெஸ்ட் இண்டீஸ் இந்திய சுற்றுப்பயணம்: 2026 செப்டம்பர் 27 - 2026 அக்டோபர் 17 - 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள்
- இலங்கையின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 டிசம்பர் 13-27 - 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள்
- ஜிம்பாப்வேயின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 ஜனவரி 3-9 - 3 ஒருநாள் போட்டிகள்
- ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம்: 2026 ஜனவரி 21 - 2026 பிப்ரவரி 27 - 5 டெஸ்ட் போட்டிகள்

