இன்றைய ஃபேஷன் உலகில் அலுவலகம் மற்றும் வெளிச்சுற்றுலா செல்வோரின் முதல் தேர்வாக ஜீன்ஸ் விளங்குகின்றது.
தினமும் துவைக்கத் தேவையில்லை
இன்றைய காலக்கட்டத்தில் அலுவலகம் முதல் வெளிச்சுற்றுலா வரை அனைவரின் வாடிரோவிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பது ஜீன்ஸ் ஆகும். ஆனால் தினமும் அல்லது அடிக்கடி அணியும் ஜீன்ஸ் பேண்டுகள் சில நாட்களிலேயே நிறம் மங்கிப் போவது பலரின் கவலையாக உள்ளது. டெனிம் துணியின் தன்மையே அது அடிக்கடி அழுக்கடையாது என்பதுதான். எனவே, நீங்கள் கடினமான வேலைகளுக்குப் பயன்படுத்தவில்லை என்றால், 4 முதல் 5 முறை உடுத்திய பிறகு துவைப்பதே சிறந்தது. லேசான வியர்வை அல்லது துர்நாற்றம் இருந்தால், சிறிது நேரம் காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டாலே போதும்.உள்புறமாகத் திருப்பித் துவையுங்கள்
ஜீன்ஸை வாஷிங் மெஷினில் போடும்போதோ அல்லது கையில் துவைக்கும்போதோ, எப்போதும் உள்புறமாகத் திருப்பிப் போட வேண்டும். இது ஜீன்ஸின் வெளிப்பகுதி மற்ற துணிகளுடன் உரசி சாயம் போவதைத் திறம்படத் தடுக்கிறது. மேலும், ஜிப் மற்றும் பட்டன்களைச் சரியாக மூடிவிட்டுத் துவைப்பது அதன் ஒரிஜினல் வடிவம் மாறாமல் இருக்க பெரிதும் உதவும்.குளிர்ந்த நீரையே பயன்படுத்துங்கள்
சூடான நீரில் ஜீன்ஸைத் துவைப்பது டெனிம் இழைகளைச் சீக்கிரமே சேதப்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, துணி சுருங்குவதற்கும், சாயம் வெளுத்துப் போவதற்கும் சூடான நீரே முக்கியக் காரணமாக அமைகிறது. எனவே, எப்போதும் சாதாரண அல்லது குளிர்ந்த நீரைப் மட்டுமே சலவைக்குப் பயன்படுத்துவது அதன் ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.மென்மையான சோப்பு (Mild Detergent) தேர்வு
அதிகப்படியான ரசாயனங்கள் கலந்த சலவைத் தூள் துணியின் ஆயுளை மிக விரைவாகக் குறைத்துவிடும். அடர் நிற ஜீன்ஸ் வகைகளுக்கு என பிரத்யேகமாகக் கிடைக்கும் லிக்விட் அல்லது மிக மென்மையான சோப்புகளைப் பயன்படுத்துவது அதன் அசத்தலான ஒரிஜினல் நிறத்தை நீண்ட காலம் தக்கவைக்க உதவும். : ஓ! அடிக்கடி கண் துடிக்கிறதா? பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?வெயிலில் நேரடியாகக் காயவைப்பதைத் தவிர்க்கவும்
துவைத்த ஜீன்ஸை ட்ரையர் மூலமாக அதிக சூடான காற்றில் உலர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் டெனிம் துணியைச் சுருங்கச் செய்துவிடும். அதேபோல், சுட்டெரிக்கும் வெயிலில் நேராகக் காயப்போடுவதாலும் நிறம் மங்கக்கூடும்; எனவே, எப்போதும் நல்ல காற்றோட்டமான நிழலான இடத்தில் உலர்த்துவதே சிறந்த முறையாகும்.
